சசிகலா வற்புறுத்தலால் ராஜினாமா செய்தேன்.
- பன்னீர் செல்வம்.
- பன்னீர் செல்வம்.
யார் வற்புறுத்தலால் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டீர்?
யார் வற்புறுத்தலால் ரேஷன் மானிய ரத்தில் கையெழுத்திட்டீர்?
யார் வற்புறுத்தலால் RSS பேரணிக்கு அனுமதி வழங்கி கெயெழுத்திட்டீர்?
யார் வற்புறுத்தலால் வர்தா புயலுக்கு நிவாரண நிதியாக சல்லிக்காசு கிடையாது என மத்திய அரசு ஏளனப்படுத்தியும் சிரித்துக்கொண்டே வந்தீர்?
யார் வற்புறுத்தலால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்ன பொழுது கள்ள மௌனம் காத்தீர்?
யார் வற்புறுத்தலால் இந்தியாவின் எந்த மாநிலத்திலேயுமே இதுவரை நடந்திறாத தலைமைச் செயலகத்திற்குள்ளேயே துணை ராணுவப் படையுடன் வருமான வரித்துறையினர் புகுந்த பொழுது ஊமைக்கோட்டான் போல் முழித்துக் கொண்டிருந்தீர்?
யார் வற்புறுத்தலால் மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா படம் இருந்ததாக சட்டப் பேரவையிலேயே பொய் சொன்னீர்?
யார் வற்புறுத்தலால் மாணவர்களை காவல்துறை அடித்து நொருக்கி கைது செய்து அள்ளிச் செல்லும் வரை கண்களை மூடிக் கொண்டிருந்தீர்?
உம்மிடம் இன்னும் ஆயிரக்கணக்கில் அடுக்காக "யார்" கேள்விகள் தொடுக்க எம்மிடம் சம்பவங்கள் ஆதாரங்களுடன் உள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து சுகம் கண்டு விட்டது. எனவேதான் "இந்த தொங்கு தொங்குகிறேன்" என்னும் உண்மையை சொல்லுமய்யா.
"அதை விடுத்து நாட்டைக் காப்பாற்றப் போகிறேன்; கட்சியை காப்பாற்றப் போகிறேன்" என்னும் கதைகளையெல்லாம் உம்முடனேயே வைத்துக்கொள்ளும்.
உம்மளவிற்கு இல்லையென்றாலும் நாங்களும் கொஞ்சம் அரசியல் அறிந்தவர்கள்தான்....!
FB Kumural