ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கடுமையாக எதிர்த்த "உதய் திட்டம்" "உணவுப் பாதுகாப்பு சட்டம்" "GST" "NHAI" இதுல எல்லாம் ஜெயலலிதா செத்த உடனே எப்டி கையெழுத்தாச்சுன்னு தெரியுமா?
தம்பிதுரை தலைமையிலான எம்பிக்கள் குழுவை காவிரி பிரச்சினைக்காக சந்திக்க மறுத்த மோடி ஓபிஎஸ் சை தனியாக சந்தித்த மர்மம் ஏன்னு தெரியுமா?
எந்த அடிப்படையுமே இல்லாமல் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் இருந்ததுனு முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பொய் பேசியதன் பின்னணியில் இருந்தது யார்னு தெரியுமா?
இத்தனை வருசமா நடக்காத ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மெரினாவில் தடை விதிக்கப்பட்ட போது நடந்தது எப்படின்னு தெரியுமா?
இதெல்லாம் நமக்கு எதுக்கு?
"ஓபிஎஸ் தலைமைல போராடி புதிய தமிழகம் படைப்போம்." நல்ல வருவிங்கயா நீங்க.
தெரியாமத் தான் கேக்குறேன் சசிகலா மாஃபியா ஓகே. ஓபிஎஸ் மட்டும் என்ன சேமியா வா? ரெண்டும் ஒரே குட்டைல ஊர்ன மட்டை தானயா. பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை பதவி வகித்த காலம் தான் தமிழக மணற்கொள்ளையர்களின் பொற்காலம். திடிரென்று பன்னீர் உத்தமனாக மாறியது எப்படி?
போராடி புதிய தடம் பதிப்போம். புதிய தமிழகத்தை ஏற்படுத்துவோம்னெல்லாம் கனவே காணாதீங்க கடைசி வரைக்கும் தீபாவா, ஓபிஎஸ் சா, சசிகலாவான்னே சுத்துங்க.. உருப்பட்டுடலாம்..
பதிவு : சாதிக் ஷா