ஹரித்துவார்: ”கறை படிந்த தலைவர்கள் என ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி குப்பையில் வீசுபவர்களை சேர்த்துக்கொள்பவர் பிரதமர் மோடி, அவர்களை பாஜ.வில் சேர்த்து தேர்தலில் சீட் தருவது ஏன்?” என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பக்வன்பூரில் நேற்று பிரசார ஊர்வலத்தை தொடங்கினார். சுமார் 75 கி.மீ. 11 தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்த அவர், புஹானாவில் பேசியதாவது:
ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை. காங்கிரசில் இருந்த ஊழல் கறைபடிந்த தலைவர்கள் இப்போது பாஜ.வில் இருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், கறைபடிந்தவர்கள் என நாங்கள் குப்பையில் தூக்கி வீசியவர்களை பிரதமர் மோடி சேர்த்துக்கொண்டு தேர்தலில் சீட் கொடுத்திருப்பது ஏன்? அவர்களை கட்டித் தழுவி அன்பு காட்டுவது ஏன்? இவ்வாறு ராகுல் பேசினார்.
உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் பலர் பாஜவில் சேர்ந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

http://kaalaimalar.net/rahul-modi-2/