வியாழன், 2 பிப்ரவரி, 2017

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஏ.டி.எம் களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும் தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டு.

பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தேவையான அளவு பணம் எடுக்கமுடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனிடையே பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான வரம்புத் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இருப்பினும் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம்களில் பணம் போதிய அளவில் நிரப்பப்படாததால் தேவையான அளவு பணம் எடுக்கமுடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டே இருப்பதாகவும், திறந்திருக்கும் ஏடிஎம் மையங்களில் 4 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.