புதன், 8 பிப்ரவரி, 2017

பன்னீரை மெரினாவுக்கு அனுப்பிவைத்த பா ஜ க! அதிர்ச்சி தகவல்

பன்னீரை மெரினாவுக்கு அனுப்பிவைத்த பா ஜ க அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய பா.ஜ.க துடித்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்தை பொம்மை முதலமைச்சராக வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்ள பா.ஜ.க. தலைமை திட்டம் வைத்திருந்ததாம். இதனை உணர்ந்து சசிகலா தரப்பு முதலமைச்சர் பதவியை பன்னீர் செல்வத்திடம் இருந்து பறித்து விட்டது. இதனை பா.ஜ.க. தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்துள்ளதால் சட்டப்படி அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை. ஆனால் பா.ஜ.கவைச் சேர்ந்த ஆளுநர் என்பதால், அவரை தமிழகம் செல்ல வேண்டாம் என பா.ஜ.க தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழகத்தில் இருந்து டெல்லி சென்றிருந்த அவர், நாளை கோவை வர இருந்தது. இந்த பயணத்தை கவர்னர் திடீரென ரத்து செய்தார். மேலும் ஊட்டியில் தங்கி இருந்த வித்யாசாகர் ராவின் குடும்பத்தினரையும் மும்பை வருமாறு அவர் கேட்டுக் கொண்டதையடுத்து அவர்களும் மும்பை சென்றுள்ளனர். பன்னீர் செல்வமே முதலமைச்சராக இருந்திருந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 40 சதவீத இடங்களை பெறுவதோடு, சட்டமன்றத் தேர்தலின் போது, 120 தொகுதிகள் வரை பெற்று, பின்னர் அதிமுக நிர்வாகிகளை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து தமிழகத்தின் இரண்டாவது கட்சியாக உருவெடுத்து விடலாம் என பா.ஜ.க.மூத்த தலைமைக்கு தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் ஆலோசனை வழங்கினராம். இந்த திட்டத்தின்படியே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

source: kaalaimalar