திங்கள், 13 பிப்ரவரி, 2017

எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான். அந்த பெண்ணை மணம் முடித்துத் தரலாமா?

தந்தையின் புகார்
எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான். அந்த பெண்ணை மணம் முடித்துத் தரலாமா?
தீர்வு
அவள் இஸ்லாத்தை ஏற்றால், அந்த பெண்ணையே மணம் தரலாம்.
கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அதை ஏற்று திரும்ணம் செய்து கொண்டார்கள்.
அபூதல்ஹா அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் அவர்களைக் கேட்டார். அதற்கு உம்மு ஸுலம் ரலி அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை மணந்து கொள்ள மறுக்க முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவே அவரது மஹராக ஆனது
நஸயீ 4389
இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக் உம்மு ஸுலைம் மீது இரக்கம் காட்டினார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவார்கள். அவர்கள் காலத்தில் இது நடந்துள்ளதால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க முடியாது.
2844அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற் கும் (அதிகமாகச்) செல்வதில்லை.27அவர்களிடம் அது குறித்துக் கேட்கப் பட்ட போது, நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு (என் பிரசாரப் படை யினரோடு) இருந்த போது (பிஃரு மஊனா என்னுமிடத்தில்) கொல்லப் பட்டார் என்று சொன்னார்கள்.
புஹாரி 2844
எனவே இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவ்ர்களின் அங்கீகாரம் உள்ளது என அறியலாம்.
முஸ்லிமல்லாத ஒருவரை விரும்பினால இஸ்லாத்தை எற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது.