வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

​எண்ணூர் பகுதி எண்ணெய் படல பாதிப்பு பல வருடங்களுக்கு இருக்கும்: ITOPF அறிக்கை


​எண்ணூர் பகுதி எண்ணெய் படல பாதிப்பு பல வருடங்களுக்கு இருக்கும்: ITOPF அறிக்கை

இந்திய கடற்படை எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் எண்ணெய் முழுவதுமாக அகற்றப்பட்டதாக அறிவித்தாலும், இண்டர்நேஷனல் டேங்கர் உரிமையாளர்கள் மாசு கூட்டமைப்பின் அறிக்கையின் படி, இது சரியாக அகற்றப்படாமல் இருக்குமாயின் பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு மேலாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பாக அமையும் என்று தெரிவித்திருக்கிறது.

ITOPF-இன் எண்ணெய் கசிவால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்த மதிப்பாய்வின் படி, இந்த பங்க்கர் என்ணெயின் அடர்த்தி அதிகமாக இருப்பதாலும், கச்சா எண்ணெயை விட நீருக்கு அடியில் அது மிதக்கும் நிலையில் இருப்பதால், அது கண்களுக்கு புலப்படும் வகையில் அமைவதில்லை.

”இத்தகைய எடை அதிகமான என்ணெய் கசிவால், அதன் மிக வழவழப்பான தன்மையின் காரணமாக, கடல் சூழலில் அதிக நாட்களுக்கு இருந்து, மிக நுட்பமான சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்” என ITOPF-இன் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷனின் துணைப் பொது மேலாளர், எஸ்.கே புரி இதுபற்றித் தெரிவிக்கும்போது, எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் கசிவடைந்த எண்ணெயின் அடர்த்தி குறைவானது என்றும், அவை நீருக்கு அடியில் தங்காமல் கடற்கரையின் ஓரம் குவிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீருக்கு அடியில் மிதக்கக்கூடும் என்று நம்பக்கூடிய சிறுபகுதி எண்ணெயால் பெரிய பாதிப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/17/2/2017/oil-ennore-chennai-spill-could-stay-environment-years-report

Related Posts: