பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பனை கட்டுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டம் ஆணைகட்டியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தேக்குட்டை, மஞ்சக்கண்டி இடங்களில் கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தமிழக அரசியல் சூழலை பயன்படுத்தி கேரளா தடுப்பணை பணியை 85 சதவீதம் முடித்து விட்டதாக கூறினார்.
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/17/2/2017/protest-against-kerala-government-build-dam