தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் குதிரை பேரம் கழுதை பேரம் என மக்கள் பிரதிநிதிகள் பங்களாக்களிலும் சொகுசுவிடுதிகளிலும் கும்பாளம் போடும் நேரத்தில்.,
தன்னை MLA வாக தேர்ந்தெடுத்த மக்களிடமே தான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று சென்றுள்ளார் நாகை MLA தோழர் தமீம் அன்சாரி.!
இது மிகச்சிறந்த நடவடிக்கை வாக்களித்த மக்களை இதைவிட எந்த வகையிலும் கண்ணியபடுத்திவிட முடியாது
அனைத்து MLA களுக்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.! உங்களை தேர்ந்தெடுந்த மக்களிடம் முடிவுகளை விடுவதே சாலச்சிறந்து.!அதுவே கண்ணியம்.!
அன்சாரி நினைத்திருந்தால் கூவத்தூர் சொகுசு விடுதியில் கும்பாளம் போட்டுருக்கலாம் சசிகலா ஓபிஎஸ்யிடம் எந்த அளவு வேண்டுமானாலும் பேரம் பேசிருக்கலாம்.! அனைத்து விதமான லாபங்களையும் மிக எளிமையாக பெற்றிருக்கலாம் மற்ற MLAகளை போல்.!
ஆனால் சுயமரியாதையுடன் அரசியல் நேர்மையுடன் கொண்ட கொள்கையில் உறுதியுடன் மக்களை நோக்கி சென்றுள்ளார் இவர் ஓர் புரட்சி MLA தான்.!
தனி சின்னமில்லாத இரட்டை இலை MLA என்ற விமர்சனத்திற்கு எல்லாம் சாட்டையடியாய் அண்ணா காமராசர் கால அரசியலின் மறுமலர்ச்சியாய் மாற்றத்திற்கான அரசியல் ஆளுமை நாகை தொகுதி MLA #தமீம்அன்சாரி.!