வெள்ளி, 3 மார்ச், 2023

தொண்டை வலி, காய்ச்சல், இருமல்… சென்னையில் பரவும் இந்த வகை காய்ச்சல்: சுகாதாரத் துறை அறிவிப்பு

 2 3 23

சமீபத்திய காலங்களில் சென்னையில் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தோற்று காய்ச்சல் பரவி வருகிறதாக பொது சுகாதாரத் துறையின் ஆய்வு கூறுகிறது.

இந்த தொற்று காய்ச்சலின் பக்க விளைவாக கூறப்படுவது என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் தாக்கம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தோற்று என்பதால் பயப்பட தேவையில்லை என்றும், தோற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பருவமழை காலம் நிறைவடைந்ததும், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பரவி வரும் வைரஸ் குறித்து பொது சுகாதாரத் துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில் வெளிவந்தது என்னவென்றால், கொரோனா அல்லது பன்றிக் காய்ச்சல் போன்றவை பரவவில்லை என்பது உறுதியானது. அதே சமயம், இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை தொற்று 50% பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/influenza-a-type-infection-spreading-in-chennai-603145/