9 4 23
புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 82 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 6,155 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதோடு, தினசரி கொரோனா பாதிப்பு பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும், மருத்துவசதிகளை அதிகரிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 82 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 ஆக இருந்த பாதிப்பு இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாம் மற்றும் மாகில் தலா2 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/corona-cases-rise-to-82-in-puducherry.html