21 4 23
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தொடர்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை சுருக்கமாக காணலாம்….
- ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட சட்டப்பேரவை கூடிய நாட்கள் – 26
- மாலையிலும் பேரவை கூடிய நாட்கள் – 08
- அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 142 மணி நேரம் 47 நிமிடங்கள்
- மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நாட்கள் – 15
- மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் – 171
- அமைச்சர்கள் பதிலுரை ஆற்றிய மொத்த நேரங்கள் – 23 மணி நேரம் 20 நிமிடங்கள்
- அதிகளவு வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர்களில் முதல் ஐந்து இடம் : அமைச்சர் V.செந்தில்பாலஜி – 17 வினாக்கள், அமைச்சர் சேகர்பாபு – 15 வினாக்கள், அமைச்சர் கே.என்.நேரு – 14 வினாக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் – 12 வினாக்கள், அமைச்சர் பொன்முடி – 10 வினாக்கள்.
- அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 12
- தகவல் கோரல் என்ற முறையில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்னைகள் – 40
- அவையில் பதிலளிக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 15
- அவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் – 24
- அவையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் – 03
- 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் – 03
source https://news7tamil.live/here-are-all-the-events-that-took-place-in-the-tamil-nadu-legislative-assembly-this-year.html