சனி, 29 ஏப்ரல், 2023

கமர்ஷியல் பைலட் ஆவது எப்படி?

 Career/Aviation/Commercial pilot

கமர்ஷியல் பைலட் ஆவது எப்படி?
விமானி என்பது சாதாரண வேலை இல்லை ...!
நமது நாட்டில் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன் என்று ஒரு துறை இருக்கிறது. அவர்கள் அளிக்கும் லைசென்சை பெற்றால்தான் ஒரு விமானத்தை இயக்க முடியும். விமானத்தைப் பொருத்தவரை பிரைவேட் பைலட் லைசென்ஸ், கமர்சியல் பைலட் லைசன்ஸ் என்று இருவகைப் படுகிறது. பிரைவேட் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் சொந்தமாக வைத்திருக்கும் விமானத்தை தான் ஓட்ட முடியும் அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான்.
ஆனால் கமர்சியல் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் எந்த விமான நிறுவனத்தில் வேண்டுமானால் சேர்ந்து பணியாற்ற முடியும். இந்த பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெற 40 மணிநேரம் விமானம் ஓட்டி பழகி இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கு 200 முதல் 250 மணிநேரம் விமானம் ஓட்டி பழகிய பிறகு தான் இந்த லைசென்சை பெற முடியும்.
விமானி ஆகும் கனவு சிறுவயதிலிருந்தே துளிர்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் விமானி ஆக முடியும், பட்டப்படிப்பு கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு தடையில்லை. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மேக்ஸ் மற்றும் பிசிக்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் (அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ) .
தளராத மன உறுதி, சாகசம், பரப்பதே இலட்சியம் (Passion for flying), இது போன்ற குணாதிசயங்களை பெற்றிருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர். நீங்கள் வணிகமுறை விமானி (Commercial pilot) ஆவதற்கு முதலில் மாணவ விமானி அனுமதி, தனியார் விமான அனுமதி மற்றும் வணிகமுறை விமானி அனுமதி என்ற மூன்ற நிலைகளை கடக்க வேண்டும்.
1. முதலில் மாணவ விமானி (Student pilot license) உரிமம்/அனுமதியை ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கிவரும் பிளையிங் கிளப்புகள் தேர்வு நடத்தி தருகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு விமான பயண விதிமுறைகள் பறப்பதற்கு தேவையான காலநிலை அறிவியல், வானத்தில் வழிகண்டு விமானத்தை செலுத்தும் விதம், விமான தொழில் நுட்பம் ஆகியவற்றை படித்திருக்க வேண்டும்.
தகுதி: மாணவ விமானியாவதற்கு குறைந்தது 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், 16 வயது நிரம்பியிருக்க வேண்டும். உடல்நல மருத்துவ சான்று (DGCA Medical examination) அவசியம். வங்கி ஒன்று ரூ.10ஆயரத்திற்கான உத்திரவாதம் (Bank guarantee) தரவேண்டும்.
2. தனியார் விமான அனுமதி (Private pilot license)
இதில் செய்முறை பயிற்சி அவசியம் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பயிற்றுனருடன் சேர்ந்து பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். 15 மணி நேரம் பறந்த பிறகு உங்களை தனியாக பறக்க அனுமதிப்பார்கள். இதிலும் எழுத்துத் தேர்வு உண்டு. இந்த பயிற்சிக்கு 17 வயது முடிந்து இருக்க வேண்டும். மருத்துவ சோதனையும் அவசியம்.
3. வணிக முறை விமான அனுமதி (Commercial pilot license) பெற குறைந்தது 250 மணிநேரம் பறந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்வில் கணிதம் மற்றும் இயற்பியலில் 55-65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 21 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையும் வென்றாக வேண்டும். ஏதாவது பட்டப்படிப்பு படித்து பிறகு கமர்ஷியல் பைலட் ஆவது சால சிறந்தது.
எங்கே பயிற்சி பெறலாம்?
உள்நாடு அல்லது வெளிநாடுகளில் பொருளாதார வசதிக்கேற்ப பயிற்சி பெறலாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள ஃபிளையிங் கிளப்புகள் மூலமோ அல்லது ரேபரேலியில் உள்ள இந்திரா காந்தி தேசிய வான் பயிற்சி மையத்திலும், சென்னையிலும் பயிற்சி பெறலாம்.
எவ்வளவு செலவு ஆகும்?
இது செலவு அதிகம் வரும் படிப்பு. ஆனால் வருமானம் அதிகம் என்பதனால் செய்யும் செலவு வீணாகாது. ஒற்றை இஞ்சின் விமானத்தில் பயிற்சி பெறுவதற்கு 12 மாத பயிற்சிக்கு ரூ. 8 லட்சம் செலவு ஆகும்.
பல இஞ்சின்கள் பொருத்திய விமானப்பயிற்சி மூலம் (18 மாதப் பயிற்சிக்கு) வணிக முறை விமான அனுமதிக்கு ரூ. 12-20 லட்சம் வரை செலவு ஆகும்.
தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கும் இடங்கள்
சென்னையிலும் கோவையிலும் பைலட் ட்ரெயினிங் கிளப் இருக்கிறது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்று லைசென்ஸ் வாங்க வேண்டும். பிறகு வேலை தேட வேண்டும்.
Madras Flying Club Ltd, Civil Airport, Chennai Airport, Chennai – 27.
Coimbatore Flying Club Ltd, Civil Aerodrome Post, Coimbatore – 641014
விமானியின் வேலை
ஒரு விமானியின் வேலை என்பதை விட அது ஒரு மிகப் பெரிய கடமை என்றே கூறலாம். தான் மட்டும் பயணிக்காமல் தன்னை நம்பி வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் வாழ்விற்கு அவர் தான் உத்தரவாதம். ஒரு விமானியின் கணிப்பு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். விமானத்தை எடுக்கும் போதும், பயணிக்கும் போதும், கீழே இறக்கும் போதும் மிக சமயோஜிதமாக அவர் செயல்பட வேண்டும். வான்வெளி என்பது ஆயிரம் பிரச்சினைகளை கொண்டது. சிறு பறவைகளால் கூட விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.
வானிலையே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ஆனால் ஒரு விமானியின் கண்களுக்குத் தெரியும் காட்சியானது நம் வாழ்நாளில் பலரால் காணமுடியாத ஒரு காட்சிதான். அவர்கள் அதை நித்தமும் காண்கிறார்கள். சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் அவர்களைப்போல காணவே முடியாது. அதுவும் அதிகாலை நேரத்தில் வானில் பறந்தவர்கள் இத்தகைய அருமையான காட்சிகளை பலமுறை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் பயணம் செய்யும் அத்தனை நேரமும் மிக சவாலாகதான் இருக்கும்.
ஒரு விமானியின் மிடுக்கான தோற்றம் அவருக்கு அவரின் சீருடை மூலமே கிடைத்துவிடுகிறது. ஒரு விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் காலை முதல் மாலை வரை ராஜ உபசரிப்புடன் மகிழலாம். வீட்டில் தங்கி இருந்தால் காலை அவர்களே கொண்டு செல்ல கேப் சாயந்திரம் மீண்டும் வீட்டில் கொண்டு விட கேப். அவர் விமானத்தில் பயணம் செய்து தங்கும் நாட்களில் இரண்டு மூன்று நாட்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்று ஏக போக வாழ்க்கை தான். ஆனால் ரிஸ்க்கும் அதில் அடங்கியிருக்கிறது.
விமானிகள் இந்த வாழ்க்கை பற்றி கூறும் போது எதுவுமே முடியாது என்று கிடையாது என்று இல்லை என கூறுவார்கள். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றுவதைப் போல இது அவ்வளவு எளிதான வேலை ஒன்றும் கிடையாது. இது வேலை என்று கூறுவதை விட இது ஒரு மிகப்பெரிய சுமை, கடமை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். இந்த வேலையைப் பொறுத்தவரை பொறுப்புணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்க வேண்டும்.
ஊதியம்?
இந்தியாவில், 250 மணிநேரம் பறந்த அனுபவம் இருந்தால், அவர்கள் வணிக விமானியாக பணியாற்றலாம். இந்தியாவில் வணிக விமானிகளின் சம்பளம் அதிகம். ஆரம்பத்தில் அவர்கள் மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்க முடியும் . அனுபவம் பெற்ற பிறகு, அவர்கள் சர்வதேச பாதையில் ஒரு மாதத்திற்கு 5 முதல் 6 லட்சம் வரை .
ஒரு தனியார் ஜெட் விமானியின் ஆரம்ப சம்பளம் வணிக விமானிக்கு சமம், ஆனால் அனுபவத்திற்குப் பிறகு அவர்கள் ரூ. ஆண்டுக்கு 50 லட்சம் .
நீங்கள் இந்திய இராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பணிபுரிந்தால், நீங்கள் ரூ. ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை . இந்திய விமானப்படையில் பணிபுரிவது எந்த ஒரு விமானிக்கும் மரியாதை மற்றும் மரியாதை.
வெளிநாட்டில் வணிக விமானியாக இருக்க, ஒருவர் 750 மணிநேரம் பறக்கும் அனுபவம் மற்றும் அடிப்படை உரிம அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்தியாவை விட இரண்டு மடங்கு சம்பளம். சில நாடுகளில் இந்தியாவை விட 3 அல்லது 4 மடங்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது.
விமானிகளின் சராசரி ஆண்டு ஊதியம் $ 129,600 டாலர்கள். ஒரு வரையறுக்கப்பட்ட நெருக்கடியான இடத்தில் இருக்கையில் அமர்ந்து வேலை செய்தாலும், குறைந்தபட்சம் நல்ல சம்பளத்தை பெறுவதுடன் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க முடியும்.
••••••••••••••••••••••••••••••••
How Do You Become a Commercial Airline Pilot in India?
Following are the steps you need to take in order to become a commercial pilot:
Step 1. Enroll in a Flying School and Pursue B.Sc. in Aviation
This admission procedure generally consists of the following:
Written Examination- The test encompasses general English, Math’s, Physics and Reasoning (10+2 standard).
Pilot Aptitude Test- The test will assess your aptitude on Air Regulation, Air Navigation, Aviation Meteorology, Aircraft and Engine Knowledge
Personal Interview and DGCA Medical examination- The candidates succeeding in written examination and aptitude test will be required to take a medical assessment conducted by the Directorate General of Civil Aviation, Govt. of India.
Step 2. Obtain a Student Pilot License
To obtain a student pilot license, you would have to appear for an entrance examination. This consists of an Oral test and will be taken by the Chief Instructor at the School, or the Directorate General of Civil Aviation (DGCA) representative. This license allows you to get flying training and permits you to take off flights on gliders or small planes that are generally provided by approved flying clubs of the country.
By the time you complete your course, you should have completed a minimum of 250 flying hours, following which you can apply for the Commercial Pilot License (CPL).
Some of the leading institutes for pursuing an Aviation course:
● Indira Gandhi Rashtriya Uran Academy (IGRUA), Rae Bareilly
● Rajiv Gandhi Academy of Aviation Technology, Kerala
● National Flying Training Institute, Gondia
● Bombay Flying Club, Mumbai
● Ahmedabad Aviation & Aeronautics Ltd., Ahmedabad
● Madhya Pradesh Flying Club (MPFC), Indore
● CAE Oxford Aviation Academy, Gondia,
● Indigo Cadet Training Program, (Hamilton, New Zealand & Hyderabad, India)
Note: Every institute has their respective specifications concerning physical fitness, and eyesight specifically.
Additionally, I would like to point out that the cost to become a commercial pilot in India is quite high, somewhere around 15 to 20 lakh Indian Rupees. However, there is an alternative way to become a pilot in India without paying such high fees, and that is by joining the Indian Defense Forces. Read on for more information.
Related links:
Become a Licensed Commercial Pilot: Step-by-Step Career Guide
INDIAN DGCA PILOT COURSE
How do I become a commercial airline pilot?
Other popular programs in this field:
* Aeronautics, Aviation, and Aerospace Science
* Air Traffic Control
* Airline Flight Attendant
* Aviation Management and Operations
* Commercial Pilot and Flight Crew
* Flight Instructor
May be an image of 1 person, aircraft and text that says 'LATEST NEWS TNTJ Students Wing பைலட் ஆவது எப்படி? Student Pilot Licence Private Pilot Licence Commercial Pilot Licence Students Wing tntjsw f visit us www.tntjsw.net 14/07/2022'

All re