சனி, 29 ஏப்ரல், 2023

10 ஆம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிப்பது?

 ஏக இறைவனின் திருப்பெயரால்...

10 ஆம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிப்பது?
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்தது என்ன படிப்பது என்று மாணவர்களும், பெற்றோர்களும் சிந்தனைகளில் ஈடுபடும் இந்த நேரத்தில் இந்த ஆக்கம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பெரும்பாலான மாணவர்களின் 10 ஆம் வகுப்பிற்குப் பிறகான தேர்வாக 11ஆம் வகுப்பை தேர்ந்தெடுப்பது என்பது தான் இருக்கும்.
அதனால், 11 ஆம் வகுப்பில் என்ன துறையை தேர்ந்தடுப்பது என்பது தான் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
இதில்தான் நமது எதிர்காலம் எந்த துறையை சார்ந்ததாக இருக்க போகிறது என்பதை தீர்மானிக்கும்.
11ஆம் வகுப்பில் இருக்கும் துறைகள் என்னென்ன?
:
அ. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பியல், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
ஆ. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு :
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவத் துறை தவிர்த்து மற்ற பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூப் கல்வியை தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
இ. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு :
மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
ஈ. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :
B.Com, CA (Charted accountant ), M.Com படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த குருப் கல்வியை தேர்ந்தெடுக்கலாம். அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
உ. வரலாறு, பொருளாதாரவியல் :
எதிர்காலத்தில் B.A., M.A., படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன
ஊ. Vocational குரூப் :
தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
10ஆம் வகுப்பிற்குப் பிறகு 11ஆம் வகுப்பு அல்லாமல் வேறு சில துறைகளும் உள்ளன.
Diploma in Engineering:
▪Mechanical Engineering
▪Civil Engineering
▪Electronic and Communication Engineering
▪Electrical and Electronic Engineering
▪Chemical Engineering
▪Computer system Engineering etc.,
இது போன்ற ஏராளமான Diploma படிப்புகள் உள்ளன.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
இதை படித்தால் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம்.
#துணை மருத்துவ_படிப்புகள்:
Para Medical Courses:
▪Medical Laboratory Assistant
▪Dental Assistant
▪ECG Assistant
▪Dialysis Technician
▪MRI Technician
இது போன்ற துணை மருத்துவ படிப்புகளை 10 ஆம் வகுப்பிற்கு பிறகு படிக்கலாம்.
இதற்கான நிறையவே வேலை வாய்ப்புகள் உள்ளன.
ITI & Certification Courses:
▪Fitter
▪Plumber
▪Welder
▪Electrician
▪Diesel Mechanic
▪Leather Goods Maker
▪Hair & Skin care
இது போன்ற படிப்புகளுக்கு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்பது இல்லை. நாமே சுயமாக தொழில் செய்துக் கொள்ளலாம்.
அரசு பணி:
▪TNPSC Group Exam ( தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் )
▪RRB ( ரயில்வே )
▪SSC ( ஊழியர் தேர்வாணையம் )
▪TNUSRB ( தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் )
இது போன்ற அரசாங்க பணிகளுக்கான தேர்வுக்கு தயார் ஆகலாம். இடஒதுக்கீட்டின் மூலம் முஸ்லிம்கள் இதில் அதிகமாக நுழையலாம்.
May be an image of text that says 'ஏக இறைவனின் திருப்பெயரால்... பத்தாம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிப்பது? TNTJ Students Wing'