கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின், OBC பிரிவு மாநில
செயலாளராக பதவி வகிப்பவர் கார்த்திகேயன். இவர் நிலப்பிரச்னை தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து, நாச்சியார் கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் வீட்டில் கடந்த 26ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில், நாட்டு வெடிகள், கத்திகள், ஏராளமான பத்திரங்கள் மற்றும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கார்த்திகேயன் மீது இரண்டு கொலை வழக்குகளும், மூன்று கொலை முயற்சி வழக்குகளும், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தின் ரவுடிகள் பெயர் பட்டியலிலும்
கார்த்திகேயன் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/explosives-seized-from-bjp-executives-house-near-kumbakonam.html