26 4 23

மன அழுத்தத்தால் தற்கொலை செய்வதை தடுக்கும் விதமாகவும், மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் கோவையை சேர்ந்த மருத்துவ மாணவர் இந்திய அளவிலான ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலியை உருவாக்கி அசத்தியுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இவரது இளைய மகன் மேத்யூ உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பி உள்ளார்.
இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த தன்னைப்போல மருத்துவ மாணவர்களின் மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தலை தடுத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்தபடியே போன் வாயிலாக ஆறுதல் வழங்கியும், உளவியல் ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு அனைத்து தரப்பினருக்கும் தீர்வு காணும் வகையில் தொழில் நுட்ப அடிப்படையி்ல் ஹீல் பாக்ஸ் HEALBOXX எனும் செயலியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.அவரது மூத்த சகோதரர் இளம் மருத்துவர் லூக் குரியன் உதவியுடன் இந்த செயலியை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
source https://tamil.indianexpress.com/tamilnadu/summer-heat-in-covai-traffic-police-humanity-he-take-care-newborn-baby-650634/