ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

 29 4 23 

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து, திக்கெட்டும் பரவட்டும் தமிழ் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேகர் காலனியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு திக்கெட்டும் பரவட்டும் தமிழ் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் தமிழ் தாய் தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள், தங்கத்தமிழே தரணி புகழ் செம்மொழியே, தமிழ் மொழியல்ல நமது உயிர், சங்கத்தமிழ் பொற்றமிழ் தந்த தமிழ் தாய் என்ற வாசகங்களை வண்ணக் கோலங்களாக இட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து விழிப்புணர்வு கோல போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஜோதி அறக்கட்டளைச் செயலாளர் பிரபு ராஜ்குமார் பரிசுகளை வழங்கினார்.
—சௌம்யா.மோ


source https://news7tamil.live/awareness-competetion-in-tanjavur-arranged-by-jyothi-trust-for-tamil-thai-vazlthu-issue.html

Related Posts: