வியாழன், 27 ஏப்ரல், 2023

மத மோதலை உருவாக்க நினைக்கும் சினிமா படங்களுக்குத் தடை விதித்து நடவடிக்கை எடுக்க கோரி

 

தேதி – 26.04.2023
உயர்திரு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கு,
தமிழ்நாடு காவல்துறை.
பொருள் – மத மோதலை உருவாக்க நினைக்கும் சினிமா படங்களுக்குத் தடை விதித்து நடவடிக்கை எடுக்க கோரி…..
சமீப காலமாகச் சங்பரிவாரச் சிந்தனை கொண்டவர்கள் அமைதிப் பூங்கா தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்துத் திரையிட்டு வருகிறார்கள். இதற்குப் பெரும் தொகைகளைச் செலவிட்டும் வருகின்றனர்.
மனித நேயமற்ற மத வெறுப்பு சிந்தனைக்கு உடந்தையாகத் திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களும் இருப்பது மிகப்பெரும் வேதனையாக உள்ளது. இதை ஆளும் அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
இவர்கள்மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் தான் அடுத்து உள்ளவர்களுக்கும் இதுபோல் ஈடுபட விடாமல் தடுக்கும்.
சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட புர்கா என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை இஸ்லாம் சொல்வது போல் புர்கா என்ற படத்தில் காட்டி இஸ்லாமியர் உள்ளங்களில் ஈட்டியைப் பாய்ச்சினார்கள்.
காட்டுமிராண்டிகளாய் மனிதன் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி மறுமணம் என்ற சட்டத்தைக் கற்றுத் தந்தது இஸ்லாம். கணவனை இழந்த முஸ்லிம் பெண்கள் மறுமணம் செய்வதற்கு விதிக்கப்பட்ட இத்தாஹ் என்ற சட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் கூட அறியாமல் மிகவும் இழிவாகப் பேசி வெளியிட்டு இருப்பதே இவர்கள் மத மோதலை ஏற்படுத்த நினைப்பவர்கள் என்பது தெளிவாகிறது.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில், மோதல்கள் ஏற்படுத்த மக்கள் தூண்டிவிடப்பட்டதை நாம் மறந்து இருக்க மாட்டோம்.
புர்கா என்ற திரைப்படம் மிகப்பெரும் கொந்தளிப்பை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தி அதன் ரணம் ஆறுவதற்குள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து பர்ஹானா என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
விபச்சாரத்தை ஊக்குவித்து இஸ்லாமியப் பெண்களை மட்டம் தட்டி கேவலமான முறையில் இந்தப் படங்களின் வசனங்கள் அமைக்கபட்டு வருகிறது. கண்ணியமாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
ஹிஜாப் அணிந்த பெண் கர்நாடக மாநிலத்தில் முதலிடம், கேரளாவில் 18 தங்கப் பதக்கங்களை வென்ற ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி என்று மூளையை ஹிஜாப் மறைக்கவில்லை என்று எடுத்துக் காட்டப் பட்டாலும் இந்தச் சங்பரிவாரச் சிந்தனை கொண்டவர்கள் சிந்திப்பதில்லை.
ஆளும் பாசிச பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு இந்த மத வெறுப்பு பிரச்சாரத்தைப் பயன்படுத்தும் என்பது அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று. தமிழகத்தைக் கலவரக் காடாக ஆக்க அவர்கள் போடும் திட்டத்தைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
புர்கா பட இயக்குநர் சர்ஜுன் நடிகர்கள் கலையரசன், மிர்னா ஆகியோரைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோரைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஐ. அன்சாரி
மாநில செயலாளர்
தொடர்புக்கு - 6385137800