வெள்ளி, 28 ஏப்ரல், 2023

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: டி.கே.சிவக்குமார்

 27 4 23

கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். 

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது நமது நியூஸ்7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், பாஜகவின் ஆட்சியில் கர்நாடக மக்கள் திருப்தி அடையவில்லை. ஊழல் தலைநகராக பெங்களூரு மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என குற்றம்சாட்டினார்.

மேலும், கர்நாடகாவில் பாஜக வலுவிழந்துவிட்டதால், பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்து வருகிறது. மக்களை காக்க வேண்டும் என்பதற்காக நான்கு பெரிய வாக்குறுதிகளை அளித்துள்ளோம். நிச்சயம் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/congress-will-win-with-single-majority-in-karnataka-dk-sivakumar-confident.html