22 4 23
ஆருத்ரா மோசடி வழக்கில் பதிலளிக்கும் வரை சம்மனுக்கு தடை விதிக்க கோரிய நடிகர் R.K.சுரேஷ் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், நடிகரும், பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
தமக்கு அனுப்பபட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆர்.கே.சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
source https://news7tamil.live/arudra-fraud-case-high-court-rejects-plea-of-actor-r-k-suresh.html