சனி, 22 ஏப்ரல், 2023

தமிழக தலைமைச்செயலகம் எங்கு அமையப்போகிறது?

 

திய தலைமைச்செயலகம்…. ராஜ்பவனா ? ரேஸ்கோர்ஸா ? இப்படி ஒரு கேள்வியை எழுப்பி தமிழக சட்டமன்றத்துக்கான கட்டிடம் அப்படி என்கிற வரலாற்றில் மீண்டும் ஒரு தொடக்கப் புள்ளியை வைத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

நூற்றாண்டு பாரம்பரயமிக்க தமிழக தலைமைச்செயலக கட்டிடமும், அதன் மாண்புக்கு இணையாக இருக்கும் இடம் குறித்த விவாதமும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

நாட்டிலேயே ஆங்கிலேயர் கட்டிய கோட்டை ஒன்றில் தமிழநாட்டில் மட்டும் தான் சட்டமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடம் இப்போதும் இந்திய ராணுவத்தின் கட்டுபாட்டில் தான் இருக்கிறது.

சட்டப்பேரவை வாடகை கட்டிடத்தில் இருக்க கூடாது சொந்த கட்டிடம் வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கை இருந்தாலும் 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசுதான் அதற்கான அச்சானியை போட்டது என்று சொல்ல வேண்டும்.

அதற்கு முன்பிருந்த அதிமுக அரசு புதிய தலைமை செயலக கட்டிடம் கட்ட பலமுறை திட்டமிட்டும் அது கைகூடவில்லை. இந்த சூழலில்தான் 2008ம் ஆண்டு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்ட அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு திட்டமிட்டு, 2010ம் ஆண்டு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்நாள் கனவுகள் மூன்று இருப்பதாக கூறுவார். அதில் ஒன்று அண்ணா நூலகம், இரண்டாவது புதிய தலைமை செயலக கட்டிடம், மூன்றாவது தொல்காப்பியர் பூங்கா.

அவர் கடைசி முறை முதல்வரா இருந்த காலகட்டதில் இந்த 3 கட்டிடங்களையும் கட்டி முடித்தார். குறிப்பாக இப்போது அரசு மருத்துவமனையாக இருக்கின்ற அப்போதைய புதிய தலைமை செயலகம்… மொத்தம் 6 மாடியும், 30ஆயிரத்து 297 சதுர அடியும் கொண்டது.

 

2010ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறக்கப்பட்ட கட்டிடத்தில் இரண்டு சட்டமன்ற கூட்டங்களும், கவர்னர் உரையும் நடைபெற்றது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வழிகாட்டி என்று கொண்டாடுகிற பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு நடுவில் இந்த கட்டிடம் இருக்கும்.2011 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்து, அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிய தலைமைசெயலகத்தில் செயல்பட்ட அலுவலகங்கள் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முறை கூட அந்த புதிய கட்டிடத்திற்கு போனதில்லை. திமுகவின் கனவு திட்டமான புதிய தலைமை செயலக கட்டிடத்தில் அதிமுக அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது.

இந்த சூழல்ல 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டிப்பாக புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மீண்டும் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வளாகத்தில் கருணாநிதியின் சிலையை அரசு வைக்கும் முதல் அதிகாரப்பூர்வ சிலையை வைத்துவிட்டு மருத்துவமனையாக தொடர அனுமதித்தது.

கொஞ்சம் நாட்களாக அமைதியாக இருந்த புதிய சட்டமன்ற கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் எழுப்ப அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,  ராஜ்பவன் நம்ம இடம் தான், அதுக்கு பக்கத்துல இருக்க ரேஸ்கோர்ஸும் நம்ம இடம் தான் என்று கூறினார். ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இருக்கின்ற மோதல் போக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அதை மனதில் வைத்து துரைமுருகன் இப்படி கூறினாரா? இல்லை நகரத்திற்கு நடுவே பல நூறு ஏக்கர்ல ஒரே ஒருத்தருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பங்களா? அப்படி என்ற ஆளுநர் மாளிகை மீதான விமர்சனத்தை வலுவாக்கி அங்கு புதிய தலைமை செயலகம் கொண்டு வர திட்டமிட்டு கூறினாரா? இல்லை நீதிமன்றம் வரை சென்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ரேஸ்கோர்ஸ் இடத்தை அரசு கையகப்படுத்த போகிறதா? என பல கேள்விகள் அமைச்சர் துறைமுருகனின் பேச்சால் மீண்டும் மைய விவாதத்திற்கு வந்துள்ளது

எப்படியாகினும் மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்திலேயே சொல்லியிருப்பதால் புதிய தலைமை செயலகம் பற்றிய ஒரு முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துவிட்டது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

source https://news7tamil.live/where-will-the-tamil-nadu-secretariat-be-located.html