வெள்ளி, 28 ஏப்ரல், 2023

கர்நாடகாவில் ஊழல் ஆட்சி நடத்துகிறது – முன்னாள் முதல்வர் குமாரசாமி

 27 4 23 

கர்நாடகாவில் பாஜக ஊழல் ஆட்சி நடத்துகிறது என முன்னாள் முதல்வர் குமாரசாமி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சார்பாக மூன்று கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் மொத்தமாக 207 தொகுதியில் ஜேடிஎஸ் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி சென்னபட்டனா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..

“ கர்நாடகாவில் பாஜக ஊழல் ஆட்சி செய்து வருகிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் கர்நாடகத்தில்  ஏமாற்றத்தை அளித்துள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கர்நாடக மக்கள் பிராந்திய கட்சிகளை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசும் பாஜகவும் மக்களின் திட்டங்களை பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் குறை கூறி சண்டையிட்டு வருகின்றனர். எங்கள் கட்சி மக்களள் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி மக்களிடம் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளோம்.

இதுவரை எங்கள் கட்சியின் சார்பாக 207 வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தை சந்தித்துள்ளோம். ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்” என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முழு பேட்டியை காண..


source https://news7tamil.live/bjp-is-running-a-corrupt-regime-in-karnataka-ex-cm-kumaraswamy-exclusive-interview-to-news7-tamil.html