25 4 23
உதகையில் பழங்குடி இன பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான நபர்களை காவல்துறை தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.
தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி உதகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை பள்ளி சென்ற மாணவி பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால், அச்சமடைந்த உறவினர்கள் சிறுமியைத் தேடியிருக்கிறார்கள். அப்போது, அருகிலுள்ள ஒரு வனப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சிறுமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள்.
அங்கே மாணவி அணிந்திருந்த சீருடை அவிழ்க்கப்பட்ட நிலையில் சடலமாகக் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
உதகையில், பள்ளிக்குச் சென்ற பழங்குடி மாணவி, வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பழங்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்திருப்பதை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலிசார் நடத்திய விசாரணையில், மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குட்டன் என்பவர் அவரது காரில் வந்துள்ளார். மது போதையில் இருந்த அவர், மாணவியிடம் தான் வீட்டுக்குதான் செல்வதாகக் கூறி காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், மாணவி கொலை செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த நபரிடம் கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tribal-girl-child-assaulted-and-murder-police-searching-absconded-accused-650144/