வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக

 21 4 23

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள்: 

  1. செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் சைகை மொழியிலும் ஒளிபரப்பப்பட்டன.
  2. உறுப்பினர்கள் பேசும் நேரம், அமைச்சர்கள் பதிலளிக்கும் நேரம் திரையில் தெரியும் வகையில் DIGITAL HOUSE திட்டம் கொண்டு வரப்பட்டது.
  3. வினாக்கள் – விடைகள் நேரத்துடன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பாகின.
  4. முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசுவது அனைத்தும் உறுப்பினர்கள் முன் உள்ள சிறு கணினியிலும் நேரலை செய்யப்பட்டன.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/events-that-happened-for-the-first-time-in-the-tamil-nadu-legislative-assembly.html