மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் இந்த செயலி பலரையும் கவர்ந்துள்ளது. நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக ப்ரைவசி வசதியில் கவனம் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது புதிதாக Keep in Chat அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது Disappearing மெசேஜ்களையும் தேவைப்பட்டால் ஷேவ் செய்து வைக்கலாம். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் “கெப்ட் மெசேஜஸ்” அம்சம் கொண்டு வரப் போவதாக கூறியது. இந்நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. மெசேஜ் அனுப்புனர் இந்த அம்சத்தை அனுமதித்தால் Disappearing மெசேஜ் அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மெசேஜ்கள் சேமிக்கப்படும்.
Disappearing மெசேஜ் அம்சம் என்பது வாட்ஸ் அப் தனி நபர் ஷேட், குரூப் ஷேட்டில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் ஆன் செய்யப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு (8 மணி நேரம், 24 மணி நேரம்) அன்றைய மெசேஜ்கள் அழிந்து விடும். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். குறிப்பாக குரூப் ஷேட் பயன்படுத்தும் போது பயனுள்ளதாக உள்ளது எனத் தெரிவித்தனர்.
அந்த வகையில் சில நேரங்களில் குரூப், தனி நபருக்கு முக்கிய தகவல்கள் அனுப்ப வேண்டி இருக்கும். அது பின்னாளில் தேவைப்படும் வகையில் இருக்கலாம். அப்போது Disappearing மெசேஜ் ஆன் செய்யப்பட்டிருந்தால் அந்த முக்கிய தகவல்களும் அழிந்துவிடும். இந்த நிலையில் Keep in Chat அம்சம் உதவியாக இருக்கும். Disappearing மெசேஜ் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் நாம் மற்றவருக்கு மெசேஜ் அனுப்பும் போது Keep in Chat ஆன் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் மட்டும் அழியாமல் இருக்கும்.
அந்த மெசேஜ் புக்மார்க் ஐகானுடன் லேபிள் செய்யப்பட்டு Kept Messages அம்சத்தில் சேமித்து வைக்கப்படும். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/technology/whatsapps-new-keep-in-chat-feature-allows-users-to-save-disappearing-messages-646705/