19 4 23
இந்த உள்ளடக்கத்தின் கொடூரமான தரம்; விக்கிப்பீடியாவில் இருந்து தரவுகள், குறிப்புகள் பறிக்கப்பட்டதால் அவமானகரமானது; நிபுணர்கள் யார் என்பது பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை – தற்போதுள்ள நாடாளுமன்ற அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் லட்சிய திட்டம் கடினமான காலநிலையில் இயங்கி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த அதிகாரப்பூர்வ பதிவுகள், லோக்சபா செயலகம் – அதன் கீழ் அருங்காட்சியகம் வருகிறது – “உள்ளடக்கத்தை உருவாக்கியவர்,” தேசிய அருங்காட்சியக நிறுவனம் (என்.எம்.ஐ), மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே என முன்னும் பின்னுமாக உள்ளது.
இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15-க்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன.
கிட்டத்தட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான இந்த திட்டமானது, தற்போதைய நாடாளுமன்ற அருங்காட்சியகத்தை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது – இது ஆகஸ்ட் 15, 2006-ல் அப்போதைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமால் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, அருங்காட்சியகம் அதன் மேம்படுத்தலுக்காக காத்திருப்பதால் அனைத்து காட்சிப்படுத்துதல்களும் அகற்றப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட வசதி இரண்டு தளங்களில் ஒரு அருங்காட்சியகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆறு கருப்பொருள்களைக் காட்டுகிறது. ஜனநாயகத்தின் விதைகள்; இந்திய அரசியலமைப்பு வரலாறு; இந்தியாவின் கட்டமைப்பு வலிமை; செயல்பாட்டில் இந்திய ஜனநாயகம்; இந்தியாவின் ஜனநாயகத்தை வெற்றிகரமாக நடத்துதல்; நாடாளுமன்ற கட்டிடம்: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைப் பற்றி அறிந்தவர், இந்த நாடாளுமன்ற அருங்காட்சியகம் மத்திய விஸ்டா மறுமேம்பாட்டின் மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், இந்த உள்ளடக்கத்தை கருத்துருவாக்கம் செய்தல், உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகள் என்.எம்.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. குருகிராமில் உள்ள தனியார் நிறுவனமான பான் இண்டெலிகாம் (Pan Intellecom), என்.எம்.ஐ-யின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் மேம்படுத்தலை செயல்படுத்த ரூ.14 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி “ஜனநாயகத்தின் விதைகள்” என்ற கருப்பொருளுக்காக, பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் பணியாற்றிய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான வரலாற்றாசிரியர் மக்கன் லால் மூலம், என்.எம்.ஐ-க்கு பான் இண்டெலிகாம் பரிந்துரைத்தது. நுழைவாயில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் பற்றிய உரைகளை வெளிப்படுத்த வேண்டும்; இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்; மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை வெளிப்படுத்த வேண்டும்.
பான் இண்டெலிகாம் மூலம் பணிகளில் ஈடுபட்ட மக்கன் லால், பின்வரும் பகுதிகளை பரிந்துரைத்தார்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் மோடி ஆற்றிய “இந்தியா ஜனநாயகத்தின் தாய்”; மார்ச் 28, 1957-ல் லோக்சபாவில் நேரு ஆற்றிய உரையின் ஒரு பகுதி, இந்தியா ஏன் பாராளுமன்ற ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்தது; நவம்பர் 25, 1949-ல் அரசியலமைப்புச் சபையில் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் ஜனநாயகத்தின் வரலாறு பற்றி ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி ஆகியவற்றை பரிந்துரைத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 9-ல் டீன் (கல்வி விவகாரங்கள்) மற்றும் என்.எம்.ஐ-யின் அருங்காட்சியகத் துறையின் தலைவரும், திட்டப் பொறுப்பாளருமான மான்வி சேத், மக்களவையின் பொதுச் செயலாளர் உத்பால் குமார் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், “கதை மற்றும் உள்ளடக்கம் மிக முக்கியமானது. புனிதமானதாகவும் முற்றிலும் புறநிலையாகவும் கருதப்பட வேண்டும். உள்ளடக்கம் தொடர்பான எந்த மாற்றமும் (சேர்ப்பது அல்லது நீக்குவது) பான் இண்டெலிகாம் ஆல் சொந்தமாக மற்றும் என்.எம்.ஐ உடன் முன் ஆலோசனை இல்லாமல் மற்றும் அதற்கான ஒப்பந்தம் இல்லாமல் செய்யக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
தெளிவாக, பான் இண்டெலிகாம் உள்ளடக்கப் பரிந்துரைகள் அதன் களத்தில் ஊடுருவுவதைக் என்.எம்.ஐ கண்டதாக ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி லோக்சபா செயலகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், என்.எம்.ஐ, மக்கன் லால்-க்கு நகல் அனுப்பப்பட்ட, உள்ளடக்கங்களின் கொடூரமான தரம் என்று குறிப்பிட்டு உள்ளடக்கத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியிடுமாறு என்.எம்.ஐ-யைக் கேட்டுக் கொண்டார்.
ஏப்ரல் 3-ம் தேதி லோக்சபா செயலகத்தின் கூடுதல் செயலாளர் பிரசேன்ஜித் சிங், என்.எம்.ஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இந்தக் கவலைகளை எதிரொலித்து, மற்றவற்றுடன், நிபுணர்களின் விவரங்களைப் பகிர்வதில் இருந்து என்.எம்.ஐ தவிர்க்கிறது” என்று கூறினார்.
“முதல் மூன்று கருப்பொருள்களுக்கான முழுமையான வார்ப்புருக்கள் இன்னும் காத்திருக்கின்றன” என்றும் பிரசேன்ஜித் சிங் சுட்டிக் காட்டினார்.
ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் 10-ம் தேதி மைசூர், அவுந்த், திருவாங்கூர், கொச்சின் பற்றிய விக்கிபீடியாவின் கட்டுரைகளின் இணைப்புகளை என்.எம்.ஐ-க்கு தனது குறிப்புகளின் ஆதாரங்களாகப் பகிர்ந்து கொண்டது.
இது ஏப்ரல் 12-ம் தேதி மக்கன் லால் பதிலளிக்கத் தூண்டியது. “ஒரு வரலாற்றாசிரியர் என்ற முறையில் நான் மிகவும் கலக்கமடைகிறேன், மேலும், நூலகங்களில் வெளியிடப்பட்ட ஆதாரங்களைக் காட்டிலும் விக்கிபீடியா மற்றும் வலையிலிருந்து கேள்விக்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற அருங்காட்சியகம் நிர்வகிக்கப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறேன். அவர்களின் கையொப்பம், ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடக்கங்கள் மற்றும் குறிப்புகளின் ஆசிரியர்களின் பெயர்களின் பட்டியலை வழங்க என்.எம்.ஐ கேட்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த திட்டத்தில் இருந்து விலகி, இதுவரை எடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து கேட்க தொடர்புகொண்டபோது, மக்கன் லால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பான் இண்டெலிகாம் நிர்வாக இயக்குனர் ஹர்பீர் சிங் பனேசர் கூறினார்: “எங்களுக்கு இன்னும் கிடைக்காத உள்ளடக்கங்களைப் பெற்ற ஐந்து மாதங்களுக்குள் திட்டத்தை முடிக்க எங்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளீடுகளையும் நாங்கள் பெற்றால் மட்டுமே முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் தேதியை என்னால் கூற முடியும்.” என்று கூறினார். ஆனால், மக்களவை செயலகத்தின் பிரசேன்ஜித் சிங் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை.
மக்கன் லாலின் பதிலைப் பற்றி என்.எம்.ஐ-யின் மான்வி சேத் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கருத்து தெரிவிக்கையில், “”என்.எம்.ஐ சமர்ப்பித்த உள்ளடக்கத்திற்கான மூலப்பொருளின் பெரும்பகுதி விக்கிபீடியாவில் இருந்து வந்தது (சொல்வது) என்பது முற்றிலும் தவறானது . ஆராய்ச்சி, களப்பணி, தொடர்புடைய விஷய வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் காப்பக ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது… நாடாளுமன்ற அருங்காட்சியகத்துடன் வழக்கமான ஆலோசனை மற்றும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
என்.எம்.ஐ நிராகரித்த பேச்சுகள் குறித்த பான் இண்டெலிகாம்-ன் ஆலோசனையைப் பற்றி கேட்டதற்கு, சேத் கூறினார்: “பொருத்தமான மற்றும் தேவைப்படும் இடங்களில் மேற்கோள்கள் / பேச்சுகளைப் பயன்படுத்துவதற்கான யோசனை எப்போதும் வரவேற்கப்படுகிறது.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/parliament-museum-upgrade-caught-in-row-horrible-content-wikipedia-sources-643592/