வெள்ளி, 28 ஏப்ரல், 2023

சூடானில் உள்நாட்டு போர்: துணை ராணுவத்தின் பிடியில் வைரஸ் ஆய்வகம் : அதிர்ச்சியில் உலகம்

 

சூடானில் உள்நாட்டு போரில் துணை ராணுவத்தின் பிடியில் வைரஸ் ஆய்வகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே திடீரென உருவாகியுள்ள மோதலால் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர். இரு பிரிவினரும் மக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறினாலும், அவர்களுக்கே தெரியாமால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த மோதலில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடானில் நடப்பது என்ன ?

கடந்த 2021 ஆம் ஆண்டில், சூடான் ராணுவத்தின் ஜெனரல் அல் புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸின், துணை ராணுவப்படையின் ஜெனரல் டகாலோ ஆகிய இருவரும் இணைந்தனர். சூடானை பல ஆண்டுகள் கோலோச்சி வந்த, உமர் அல் பஷீர் ஆட்சியை, புரட்சியின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் இருவரும் இணைந்து ஆட்சியை பிடித்தனர். ராணுவத்தின் ஜெனரல் அல் புர்ஹான் ஆட்சியின் தலைவராகவும், துணை ராணுவப்படையின்(ஆர்எஸ்எப்) ஜெனரல் டகாலோ ஆட்சியின் துணை தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். வழக்கம் போல் சில காலம் அமைதியாக சென்றது. பிறகு இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை, துணை தலைமை என்று அறிவிக்கப்பட்டது.

துணைத்தலைமையை ஏற்ற டகாலோ அமைதியாக இருந்தார். கடந்த ஓராண்டாக இரு தலைவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. துணை ராணுவப்படையின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் , ஆர்எஸ் எப் அமைப்பை ராணுவத்துடன் இணைகப்பட்டது. ஆட்சியில் துணைத்தலைமை பதவி வகித்த டகாலோவிற்கு, ஆட்சித்தலைவர், புர்ஹானுக்கு இணையான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆனாலும், டகாலோவிற்கும் இணையான,தலைமை பதவி வழங்கியதை புர்ஹான் விரும்பவில்லை. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. நாட்டை ஆள்வது யார் ? ராணுவத்தை கட்டுப்படுத்துவது யார் என மோதல் முற்றியது. இந்த மோதல் தற்போது அங்கே மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது.

என்ன தான் ராணுவம், துணை ராணுவம்(ஆர்எஸ்எப்) ஒன்றினைந்தாலும் தனிக் குழுக்களாகவே செயல்பட்டு வந்தனர். யார் பெரியவர் என இரு தரப்பும், மாறி மாறி மோதிக்கொண்டனர். இரண்டுமே ராணுவம்தான் என்பதாலும் இரண்டு தரப்பிடமும் ஆயுதங்களுக்கும், பயிற்சி பெற்றவர்களுக்கும் பஞ்சம் இல்லை. அதனால் இந்த மோதல் இப்போதைக்கு முடியாது. மோதல் இன்னும் மோசமாகலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அங்கே நடக்கும் உள்நாட்டு போரில் இதுவரை சுமார் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடுகின்றனர்.

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், அங்கே வைரஸ்கள் அடங்கிய முக்கிய ஆய்வகம் ஒன்று போராளிகள் குழுவிடம் கையில் சிக்கி உள்ளத தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே உள்ள வைரஸ் ஆராய்ச்சி கூடம் ஒன்றை ஆர்எஸ்எப் கைப்பற்றி உள்ளது. அந்த ஆய்வகத்தில், பல லட்சம் வைரஸ் மாதிரிகள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இதை தவறாக கையாண்டாலோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டாலோ, அங்கிருந்து வைரஸ்கள் வெளியேறி , உலகிற்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இனி உலகிற்கே ‘பெரிய உயிரியல் ஆபத்து’ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இப்படி தான் கடந்த  2019 ஆம் ஆண்டு, சீனாவின் வூகான் மாநிலத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றிலிருந்து, கொரோனா வைரஸ் வெளிவந்தது, ஒட்டு மொத்த உலகத்தையே கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கதிகலங்க வைத்தது. பல கோடி மக்கள் உயிரிழந்தனர். உலக பொருளாதாரமே தலைகீழாகி போனது குறிப்பிடதக்கது

இதனிடையே,சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, இந்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த வகையில், சூடானில் சிக்கித் தவித்தவர்கள், மீட்கப்பட்டு டெல்லி வந்திறங்கினர். பின்னர் தில்லியில் இருந்து விமானம் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

சூடானில் பல பகுதிகளில் போர் தொடங்கிய நாளிலிருந்து குடிநீர், மின்சாரம் தடைபட்டுள்ளது.சொந்த நாட்டில் நாடோடிகளாக அலைந்து திரிந்து வருகின்றனர். உயிர் வாழ்ந்தால் போதும் என, சம்பாதித்தது அனைத்தையும் விட்டு விட்டு மக்கள் பரிதாபமாக உள்ளதை கவலையுடன் விவரிக்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

-ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

source https://news7tamil.live/civil-war-in-sudan-virus-lab-held-by-paramilitaries-world-in-shock.html