11/11/23 உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பா் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள்தொகை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
கடந்த 2000-ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.
பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.
டோக்கியோவின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது. பட்டியலில் டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 மக்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன. 2,12,96,517 மக்களுடன் மும்பை 9வது இடத்திலும், 1,53,32,793 மக்களுடன் கொல்கத்தா 17வது இடத்திலும், 1,36,07,800 மக்களுடன் பெங்களூரு 23வது இடத்திலும், 1,17,76,147 மக்களுடன் சென்னை 26வது இடத்திலும் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/world-population-crosses-800-crores-chennai-ranks-26th-with-1-17-crores-worldwide.html