தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவு (டீல்ஸ்) திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாட் ஜி.பி.டி தொழில்நுட்பம் கற்பிக்கும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
தி.மு.க அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஏற்கனவே 14 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் வாரங்களில் மேலும், பல பள்ளிகள் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாட் ஜி.பி.டி தொழில்நுட்பம் கற்பிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, தி.மு.க அரசின் லட்சியத் திட்டமான தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு திட்டம் (டீல்ஸ் TEALS) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 100 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு, சாட் ஜி.பி.டி தொழில்நுட்பங்கள் பற்றி. தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேட்டா மற்றும் ஏஐ இயக்குநர் சுசில் எம்.சுந்தர், “தமிழக அரசுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் முதல் முறையாக 'டீல்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் டீல்ஸ் பாடத்திட்டத்தை கற்பிக்கிறோம். முதற்கட்டமாக 14 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அடிப்படை படிப்புகளை கற்பிக்கிறோம். அதன்பிறகு, மாணவர்கள் புத்தாக்கத்தை அறிந்துகொள்ள உதவும் வகையில், 100 பள்ளிகளுக்கு ஏ.ஐ-ல் பயிற்சி அளிக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை தேடலாம், வேலை வாய்ப்பில் உலக அளவில் போட்டியிட முடியும்.
தமிழகத்தில் கிராமப்புற குழந்தைகளுக்கு ஏ.ஐ, சாட் ஜி.பி.டி தொழில்நுட்பம் கற்பிப்பது தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதற்கான கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்கும்போது, உள்ளூர் பொருளாதாரம் வளரும், சமூகப் பொருளாதாரமும் வளரும். இது நீண்ட காலத்திற்கு நல்ல பலனைத் தரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களை உலகளாவிய தலைவர்களாக உருவாக்க அரசு பள்ளிகள் ஒத்துழைக்க வேண்டும்.
முதலில் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஏ.ஐ கற்பிக்கப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான பாடத்திட்டம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் 6-ம் வகுப்பில் இருந்து பாடம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவைக் கட்டாயப் பாடமாக்குவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பணி கற்றல், ஆழ்ந்த கற்றல், அறிவாற்றல் கற்றல், தொழில்நுட்பம், சாட் ஜி.பி.டி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பற்றி கருத்தியல் ரீதியாகவும் பின்னர் செயல்முறை ரீதியாகவும் கற்பிக்கிறோம். குழந்தைகள் தங்கள் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளவும், பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்குச் செல்லவும் மைக்ரோசாஃப்ட் அஸூரைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tn-govt-to-teach-ai-at-govt-schools-with-microsoft-association-2380979