சனி, 13 ஜனவரி, 2024

கணவருடன் பாலுறவுக்கு மனைவி மறுப்பது கொடுமை; ஐகோர்ட்

 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவந்த தம்பதி விவாகரத்துக் கோரி 2014ஆம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

திருமண வாழ்வில் திருப்தி கிடைக்காத ஆண் இந்த வழக்கை தொடுத்திருந்தார். அதில், மனைவி, திருமணத்துக்கு பின்னர் பாலுறவுக்கு மறுத்ததாகவும் இதனால் தாம் மனம், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் காரணங்களுக்காக விவாகரத்து அளிக்க குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மனுதாரர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த மனு, நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் வினய் சரஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மனுதாரர் கூறும் காரணங்களை புரிந்துக் கொள்ள முடிகிறது. திருமணம், பாலுறவுக்கு மறுத்தல், விவாகரத்துக்கு மறுத்தல் உள்ளிட்ட வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்.

இந்த உத்தரவு ஜன.3,2024ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த உத்தரவு நாடு முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/wifes-refusal-to-have-physical-relations-with-husband-amounts-to-cruelty-madhya-pradesh-hc-2380020

Related Posts: