வியாழன், 4 ஜனவரி, 2024

மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு?

 

மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு? 3 1 24 

4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம்,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள்,  இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றும்,  அது நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.  இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.  இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமல்படுத்தப்படமால் இருந்து வருகிறது.

இந்நிலையில்,  மக்களவை தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும்,  தகுதியானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும்,  ஒட்டுமொத்த நடைமுறையும் இணைய வழியில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/promulgation-of-citizenship-amendment-act-rules-before-lok-sabha-elections.html