சனி, 24 பிப்ரவரி, 2024

சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை சேவை – தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது,  யுமாஜின் (UMAGINE) – வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன்படி,  முதலாவது “UmagineTN” மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக,  இந்த ஆண்டும்,  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இலவச வைஃபை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிதிநிலை அறிக்கையில் சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  இதன் முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள்,  பேருந்து நிலையங்கள்,  கடற்கரைகள் போன்ற சென்னையின் 500 முக்கிய இடங்களில்  தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


source https://news7tamil.live/free-wi-fi-service-in-500-places-in-chennai-started-by-chief-minister-m-k-stalin.html

Related Posts:

  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • யோகா மோடி செய்வது யோகா என்றால் ..? உலகில் கறுப்பர் வெள்ளையர் எனஅனைத்து முஸ்லிம்களும் அனுதினமும்ஐவேளையும் கடைபிடிப்பதை தான்மோடி செய்க… Read More
  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More
  • திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம் கொடுத்த காஜாமுகமது. புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாரா… Read More
  • நோன்பின் ஸஹர் உணவு. சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்ட… Read More