திங்கள், 26 பிப்ரவரி, 2024

11, 12-ம் வகுப்புகளுக்கு சம வெயிட்டேஜ்; மாநில வரைவு கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்கள் என்ன?

 முதலாம் வகுப்பில் சேர்வதற்கான வயது உட்பட, தமிழ்நாடு வரைவுக் கல்விக் கொள்கை தேசியக் கல்விக் கொள்கையில் (NEP) இருந்து வேறுபட்டதாக உள்ளது.

தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது. இதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தக் குழு 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்துள்ளதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டதுஆனால் மாநில அரசு இன்னும் அதைப் பெற்று வெளியிடவில்லை.

இதற்கிடையில், மாநிலக் கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையில் இருந்து பல்வேறு அம்சங்களில் வேறுபட்டதாக உள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை (SEP) ஐந்து வயது குழந்தைகள் முதல் வகுப்பைத் தொடங்கலாம் என்று கூறுகிறதுஅதே சமயம் தேசிய கல்விக் கொள்கை 6 வயதை நிரம்பியிருக்க வேண்டும் என்று கூறுகிறது.

அனைத்து மாநிலங்களும் ஆறு வயது நிரம்பியவர்களையே முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது. தற்போது​​தமிழகத்தில் முதலாம் வகுப்பில் சேர வயது ஐந்து நிரம்பியிருந்தால் போதும்.

தேசிய கல்விக் கொள்கை போலல்லாமல் கல்லூரி சேர்க்கைக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் செயல்திறனுக்கு சம வெயிட்டேஜை மாநில கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுவான தேர்வுகளை பரிந்துரைத்துள்ள நிலையில், மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி அளவிலான தேர்வுகளை மட்டுமே பரிந்துரைக்கிறது.

ஹானர்ஸ் பட்டத்திற்கான நான்கு ஆண்டு படிப்புகளை அனுமதிக்கும் அதே வேளையில், தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட பல கட்டங்களில் படிப்பிலிருந்து வெளியேறுவதை மாநிலக் கல்விக் கொள்கை எதிர்க்கிறது.

எல்.கே.ஜியு.கே.ஜி மாணவர்களுக்கு விளையாட்டை மட்டும் வலியுறுத்துகிறது மற்றும் கல்விச் செயல்பாடுகள் எதுவும் இல்லை. மேலும், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு மற்றும் பட்டப்படிப்பு மையங்களை உருவாக்க பரிந்துரைக்கிறது.

முன்னதாக, கருத்துக் கேட்பு கூட்டங்களின்போது​​மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய விரும்பினர்.

இந்தநிலையில், "பல தனியார் பள்ளிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனஏனெனில் அதன் மதிப்பெண்கள் மட்டுமே மாநிலத்தில் பொறியியல்கலைஅறிவியல் படிப்புகளில் சேர்க்கைக்காகக் கருதப்படுகின்றன. ஆனால் குழு 1112 ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் கொடுக்க விரும்பியது. அப்போது தான் மாணவர்கள் இளங்கலைப் படிப்புகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்று குழுவின் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

மேலும், “மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஐந்து வயதை நுழைவு வயதாகக் குழு பரிந்துரைக்கிறது. எல்.கே.ஜி.யு.கே.ஜி.படிக்கும் மாணவர்கள் விளையாட்டு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாசிப்புஎழுதுதல் போன்ற செயல்பாடுகளைக் கொடுக்கக் கூடாது,” என்று அறிக்கை கூறுகிறது.

தனியார் மற்றும் நர்சரி பள்ளிகள் மூன்று வயதிலேயே மாணவர்களை சேர்க்கின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான நுழைவு வயதை மூன்று ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளது. சிறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பொதுவான வயதை முடிவு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-state-education-policy-refers-same-weightage-to-class-11-and-12-3997922