நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் 2023-24-ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளின்படி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 147.24 கோடியாக மதிப்பிடப்பட்டது.
2024-25-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 172.99 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26-ம் ஆண்டில் ரூ.2.26 லட்சம் கோடியாக இருக்கும்.
2024-25-ம் ஆண்டில் வருவாய் செலவினங்கள் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 288.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24-ம் ஆண்டைவிட 9.70 சதவீதம் அதிகமாகும். ஊதியச் செலவினங்களுக்காக ரூ.84 ஆயிரத்து 931.60 ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்களுக்கான 2024-25-ம் ஆண்டுக்கான மதிப்பீடு ரூ.37 ஆயிரத்து 663.56 கோடியாக இருக்கும். முந்தைய ஆண்டுகளில் வாங்கப்பட்ட பொதுக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை அதிகரித்தபடி உள்ளது. 2024-25-ம் ஆண்டில் வட்டி செலுத்துவதற்கான செலவினம் ரூ. 63 ஆயிரத்து 722.24 கோடியாக இருக்கும். 2024-25-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278.73 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதல், திரும்பச் செலுத்துதல் ஆகியவை மதிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி 2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 584.48 கோடி அளவிற்கு மொத்த கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 31.3.2025 அன்று தமிழகத்தில் நிலுவையில் உள்ள கடன் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 361.80 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 26.41 சதவீதமாகும்" என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-budget-2024-revenue-deficit-and-income-3862080