வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

இனி 600 மார்க்: 10-ம் வகுப்புத் தேர்வில் முக்கிய மாற்றத்தை அறிவித்த தமிழக அரசு

 16 2 24

10ம் வகுப்புல் பொதுத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருப்பப் பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துகொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இதில் நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு, 35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குறிய மதிப்பெண்கள்  என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில்  இருந்து அமலுக்கு  வருவதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை விருப்பப்படமாக தேர்வு செய்யக்கூடிய  மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள், 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள், 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.   


source https://tamil.indianexpress.com/education-jobs/10-mark-system-changed-education-department-announcement-3802828