ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு


dmk Alaince

தி.மு.க. கூட்டணி

இந்தியாவில் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.




இந்தியாவில் வரும் ஏப்ரல் மாத நடுவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் நாள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில்அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள்ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில்தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாககடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக நவாஸ்கனி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவர் தங்களது சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்,  காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில்மக்களவை தேர்தலில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. தி.மு.க.விடம் ஒரு மக்களவை சீட் கேட்டோம். தற்போது மக்களவை தேர்தல் தொடர்பாகவே பேச்சு வார்த்தை நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் தி.மு.க கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும்கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாமக்கல் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறை தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து கட்சியின் செயற்குழு முடிவுசெய்யும் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கடந்த முறையைப்போலஇந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

source  https://tamil.indianexpress.com/tamilnadu/parliament-election-dmk-alliance-iuml-one-seat-ramanathapuram-3989575