செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

மீளாத போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி – பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

 


பாலஸ்தீனத்தில் தொடர்ச்சியான போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி காரணமாக பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் சதஹ்யா தனது  பதவியை ராஜினாமா செய்தார்.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே,  நவம்பர் இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி,  தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணையக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.  இந்நிலையில்,  காசாமுனையில் உள்ள பணையக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணையக் கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.  காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது.  இந்த நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90 பேர் உயிரிழந்தனர் மற்றும் 164க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,782, ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார்  70,043 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா முனை மற்றும் மேற்கு காசா முனையில் கடுமையான பாதிப்புகள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் முடிவுக்கு வராத போர் மற்றும் உணவுப் பற்றாக்குறை சமாளிக்க முடியாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் சதஹ்யா அறிவித்துள்ளார். மேலும் அவர் பாலஸ்தீன பிரதமரான மஹ்மூத் அப்பாஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் பேட்டியளித்த வர் “மேற்கு மற்றும் ஜெருசலேமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் தீவிரமடைந்து வருவதாகவும்,  காசாவில் இனப்படுகொலை மற்றும் மக்கள் பட்டினியால் வாடுவதையும் கருத்தில் கொண்டு ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/palestinian-prime-minister-resigns-echoes-of-unrelenting-war-and-severe-hunger.html#google_vignette

Related Posts:

  • பல் வலி💥 👍👍👍👍👍இயற்கை மூலப்பொருட்கள்: பச்சை மிளகாய்-3,பனங்கல்கண்டு-50கிராம். உபயோகிக்கும் விதம்: பச்சை மிளகாயை நன்றாக அரைக்கவும்,பனங்கல்கண்டு 50கிராம்… Read More
  • உரிய தண்டனை வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் *Y g மகேந்திரனை கைது செய்து! உரிய தண்டனை வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ...* … Read More
  • காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேர… Read More
  • Hadis நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தா… Read More
  • மூலிகை மருத்துவம் 1) பொன்மேனி தரும் குப்பைமேனிகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் கு… Read More