வியாழன், 22 பிப்ரவரி, 2024

மு.க. ஸ்டாலின் வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை: இதில் என்ன ஸ்பெஷல்?

 

மு.க. ஸ்டாலின் வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை: இதில் என்ன ஸ்பெஷல்?

21 2 24
 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாநில மகளிர் கொள்கை 2024-ஐ வெளியிட்டார். இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.21) தலைமைச் செயலகத்தில் மாநில மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-யை வெளியிட்டார்.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி, அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “இக்கொள்கையினை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மகளிர் மேம்பாட்டுக்கென தனியான ஒரு கொள்கையை வெகுசில மாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் குறிக்கோள்களாக

  • பாலின உணர்திறன் கல்விமுறை
  • பெண் குழந்தைகள் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்
  • வேலைவாய்ப்புகளில் மகளிர் பங்களிப்பு அதிகரித்தல்
  • தொழில் துறையில் பெண்கள் மேம்பாடு
  • கடன் வசதிகளை அணுகுதல்
  • அரசியல் களத்தில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் போன்றவை உள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-m-k-stalin-released-the-state-womens-policy-2024-3904534