வியாழன், 22 பிப்ரவரி, 2024

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

 

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் (21.02.2024) இன்று 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகள், தலைநகர் டெல்லிக்குள் நுழைய படையெடுத்து வருகின்றனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.


இதையும் மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சுப்கரன் சிங் என்ற 23 வயது விவசாயி காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 2 பேர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது, டெல்லி எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


source https://news7tamil.live/a-farmer-died-in-the-protest-field-in-delhi.html#google_vignette

Related Posts: