ஞாயிறு, 10 மார்ச், 2024

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழ்நாடு மீனவர்கள் கைது!

 

தமிழ்நாட்டை சேர்ந்த 22 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு படகையும் அதிலிருந்து 6 தமிழ்நாடு மீனவர்கள் உட்பட 22 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர், யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடனர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



source https://news7tamil.live/tamilnadu-fishers-rameswaram-srilankaarrest.html