பீகார் மாநிலம் பாட்னாவின் பிஎன் கல்லூரியில் 22 வயது மாணவர் ஒருவர் திங்கள்கிழமை சுல்தாங்கஞ்ச் சட்டக் கல்லூரியில் பரீட்சை எழுதச் சென்றபோது குச்சிகள் மற்றும் செங்கற்களால் ஆயுதம் ஏந்திய 10- 15 பேரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இது குறித்து எஸ்.பி பாரத் சோனி,“பிஎன் கல்லூரியில் தொழிற்கல்வி ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஹர்ஷ் ராஜ், நேற்று சுல்தாங்கஞ்ச் சட்டக் கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அங்கிருந்த சில மாணவர்கள் கூறுகையில், முகமூடி அணிந்த 10-15 பேர் வந்து அவரை கட்டையால் அடித்தனர். பின்னர், ராஜின் நண்பர்கள் அவரை PMCH அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாங்கள் மக்களை விசாரித்து வருகிறோம், தடயவியல் குழு மற்றும் நாய் படை சம்பவ இடத்தில் உள்ளது. எங்கள் தொழில்நுட்பக் குழு மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் ஏஎஸ்பி (நகரம்) ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றனர். ஆதாரங்களின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், இந்த சம்பவம் "வளாகத்தின் ஆடிட்டோரியத்திற்குள்" நடந்ததாக அவர் கூறினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், அங்கிருந்தவர்கள் படம்பிடித்த வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து சம்பவம் என்ன காரணத்தினால் நடந்தது என்ற கேள்விக்கு, “ஆனால் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கூற்றுப்படி, அவர் சமூகத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். கடந்த தசரா அன்று அவர் ஏற்பாடு செய்த கல்லூரி விழாவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தக் குற்றத்தை இதனுடன் இணைக்கலாம் என்கிறார்கள். மற்ற கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” எனப் பதிலளித்தார்.
source https://tamil.indianexpress.com/india/22-year-old-patna-college-student-beaten-to-death-by-masked-men-armed-with-sticks-bricks-4704187