திங்கள், 27 மே, 2024

திருப்பூரில் மதநல்லிணக்கம்: கோயில் கட்ட பள்ளிவாசல் நிலத்தை தானமாக அளித்த இஸ்லாமியர்கள்!

திருப்பூரில் மதநல்லிணக்கம்: கோயில் கட்ட பள்ளிவாசல் நிலத்தை தானமாக அளித்த இஸ்லாமியர்கள்!

திருப்பூர் மாவட்டம், ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்காக பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் தானமாக வழங்கினர். இப்பகுதியில் ஏற்கனவே பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் ஏதும் இல்லாததால் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். தற்போது அங்கு விநாயகர் கோயில் கட்டப்பட்டு, இன்று குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து அசத்தினர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.