திங்கள், 27 மே, 2024

நீதிபதி மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார்: என்ன காரணம்?

 கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம் அன்னதானம் நடைபெறும். அப்போது அங்குள்ள எச்சில் இலைகளின் மீது பக்தர்கள் உருளும் சடங்குக்கு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


இந்தத் தடையானது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்தத் தடைக்கு எதிராக கரூரைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு,  சம்பந்தப்பட்ட சடங்குக்கு அனுமதி அளித்து  உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட்டியிடம் முறையிட்டுள்ளனர்.

அந்தப் புகாரில்,  எச்சில் இலை மீது உரலும் சடங்குக்கு தடை விதிக்கப்பட்ட கடந்த கால தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.  தொடர்ந்து நீதிபதியின் கடந்த கால தீர்ப்புகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/a-complaint-has-been-lodged-with-the-chief-justice-of-the-supreme-court-against-judge-gr-swaminathan-4609724