புதன், 29 மே, 2024

நாட்டிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம்!

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி 40 வயது பெண்ணுக்கு கல்லீரல் அறுவைசிகிச்சை நடைபெற்றது.  இது அந்த மருத்துவமனையின் 11வது கல்லீரல் அறுவை சிகிச்சையாகும்.  இதன்மூலம் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.  மேலும் இந்த அறுவைசிகிச்சையின் மூலம் நாட்டிலேயே தமிழ்நாடு,  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கல்லீரல் மருத்துவத்துறை இயக்குநர் கே.பிரேம்குமார் கூறுகையில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.  தற்போது 11-வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அனைவரும் தொடர் மருத்துவ கண்காணிப்புடன் நலமாக உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.


source https://news7tamil.live/tamil-nadu-is-the-first-in-liver-transplantation-in-india.html