வியாழன், 30 மே, 2024

காசா – எகிப்து எல்லையை

 

காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது.

இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது.  இந்தத் தாக்குதல்களில்  உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இஸ்ரேல் தற்போது ரஃபா நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த நிலையில், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

14 கிமீ தூரம் கொண்ட இந்தப் பகுதி பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படுகிறது.  மேலும், எகிப்திய சினாய்க்கு செல்லும் 20 சுரங்கப்பாதைகளை இதுவரை கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. எல்லையில் ஹமாஸால் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான ராக்கெட் லாஞ்சர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

source https://news7tamil.live/the-israeli-army-captured-the-entire-gaza-egypt-border-area.html