கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி குறித்து சாட்டை துரைமுருகன் பாடிய பாடல் சர்ச்சையானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் பாடிய பாடல் ஏற்கனவே உள்ளது என்றும் அந்தப் பாடலில் உள்ள ஒரு வார்த்தை சாதிய தீண்டாமையை குறிப்பது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி ஆணையம் சில பரிந்துரைகளை கொடுத்துள்ளது.
அதன்படி, சமூகப் பயனுள்ள பணிளைச் செய்கின்றன குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், மேடைகளில் வசைபாடுவதற்கு பயன்படுத்துவதும், கலை நிகழ்ச்சிகளில் மற்றும் திரைப்படங்களில் பயன்படுத்துவதும் பரவலாக இருந்துவருகிறது.
இது அப்பெயர் கொண்ட மக்களை புண்படுத்தும் செயலாகும். மேலும் இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்பதும் பொதுச் சமூகத்திடம் இல்லை. ஏனெனில் 1989 எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தியாவில் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கிறார்கள். பிறரை இழிவுப்படுத்தும் நோக்கில் இப்பெயர் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு இந்தப் பெயரை பயன்படுத்துவோர் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-adi-dravidar-state-commission-has-recommended-filing-a-case-of-scst-act-if-the-word-sandalar-is-used-6143374