புதன், 17 ஜூலை, 2024

மின்சாரத் தாக்குதலில் இருந்து உயிரைக் காக்கும் RCD கருவி;

 

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் நுகர்வோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மின்சாரத் தாக்குதலில் இருந்து உயிரைக் காக்கும் RCD கருவியை வீடுகளில் உடனடியாக பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து அறிவித்துள்ளது.

மேலும், RCD கருவி பொருத்தப்பட்டதை மக்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், எங்க வீட்ல RCD இருக்கு உங்க வீட்டில் RCD பொருத்திய புகைப்படங்களை எடுத்து, Twitter-ல் #TANGEDCO_RCD_Safety என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றுங்கள்.  தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மின்சார பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து வீடுகளிலும் RCD கருவி பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. 

உங்கள் வீட்டில் RCD இன்னும் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்துங்கள். நம் அன்பானவர்களின் உயிரைக் காப்போம் என்று தமிழ்நாடு மின்சார வாரியமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியமான டான்ஜெட்கோ வீடுகளில் RCD என்ற ஒரு சிறிய பாதுகாப்பு கருவியைப் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளது. 

ஆர்.சி.டி (RCD) கருவி என்பது எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்.சி.டி) இது ஒரு பாதுகாப்பு சாதனம். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது. RCD-கள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. வீட்டில் பியூஸ் இருக்கிறேதே என்று கருத வேண்டாம், இது பியூஸை விட வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால், உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம் ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். 

ஆர்.சி.டி கருவி பொதுவாக மின்சார சர்க்யூய்ட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும். யாராவது மின்சர ஒயரை தொட்டால் நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்து, அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் மின்சார தாக்குதலால் உயிரிழப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தை இந்த ஆர்சிடி கருவி குறைக்கிறது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tangedco-request-to-all-consumers-to-set-rcd-in-house-to-save-lives-from-electric-shocks-6145022