வியாழன், 12 செப்டம்பர், 2024

உலகின் முதல் தனியார் விண்வெளி நடைபயணத் திட்டம்: போலரிஸ் டான் மிஷன்

 

polaris

ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் புளோரிடாவிலிருந்து செவ்வாயன்று ஏவப்பட்டது, அமெரிக்க பில்லியனர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு பூமி சுற்றுப் பாதைக்கு சென்றது. அங்கு அவர்கள் உலகின் முதல் தனியார் விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

போலரிஸ் டான் என அழைக்கப்படும் இந்த ஐந்து நாள் பணியானது போலரிஸ் திட்டத்தின் கீழ் மூன்று சோதனை மற்றும் மேம்பாட்டு பணிகளில் முதன்மையானது, இதை ஐசக்மேன் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து செய்கிறது. ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலில் ஆகஸ்ட் 28 அன்று ஏவுதல் திட்டமிடப்பட்ட நிலையில்  ஹீலியம் கசிவு காரணமாக தாமதமானது. பிறகு புளோரில் இருந்த மோசமான வானிலை காரணமாக திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு நேற்று செவ்வாய்கிழமை ராக்கெட் ஏவப்பட்டது.

நடைபயணத் திட்டம் (spacewalk) என்றால் என்ன? 

விண்வெளி நடைபயணம் அல்லது "எக்ஸ்ட்ராவெஹிகுலர் செயல்பாடு (EVA)" என்பது விண்வெளியில் ஒரு விண்வெளி வீரர் அவர்களின் விண்கலத்திற்கு வெளியே செலவிடும் ஒரு காலகட்டமாகும்.

முதன்முதலில் மார்ச் 18, 1965 அன்று சோவியத் விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார் - 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையேயான பனிப்போரின் போது விண்வெளி ஆய்வை யார் முதலில் வெல்வது என்பது குறித்த போட்டி நடைபெற்றது. லியோனோவின் நடைபயணம்10 நிமிடங்கள் நீடித்தது.

இன்று, விண்வெளி நடைபயணங்கள் பொதுவாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெளியே செய்யப்படுகின்றன. அது ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும்.

விண்வெளி நடைபயணம் அறிவியல் சோதனைகளை மேற்கொள்வது உட்பட பல காரணங்களுக்காக செய்யப்படுகின்றன.

விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு, விண்வெளி வீரர்கள் விண்வெளி உடையை அணிந்துகொண்டு, தங்கள் விண்கலத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள கயிறு போன்ற பாதுகாப்பு இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். 

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகையில்,  “கயிறின் ஒரு முனை விண்வெளியில் நடப்பவருக்கு இணைக்கப்பட்டுள்ளது. மறுமுனை விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு டெதர்கள் வீரர்கள் விண்வெளியில் மிதக்காமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியது.

மற்றொரு வழி SAFER (Simplified Aid for EVA Rescue) அணிந்து கொள்வதாகும். இது ஒரு பேக் பேக் போல் போடப்பட்டு, விண்வெளியில் ஒரு விண்வெளி வீரர் செல்ல உதவும் சிறிய ஜெட் த்ரஸ்டர்களைக் கொண்டுள்ளது. SAFER ஒரு சிறிய ஜாய்ஸ்டிக் மூலம் விண்வெளி வீரர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

போலரிஸ் டான் யார்?

போலரிஸ் டான் விண்கலத்தில் மின்னணு கட்டண நிறுவனமான Shift4 -ன் நிறுவனர் ஐசக்மேன் உள்ளார். இவர் ஸ்பேஸ்எக்ஸுடன் இணைந்து பணியை நிதியளித்துள்ளார், மேலும் குழுவின் தளபதியாக உள்ளார்.

ஐசக்மேனைத் தவிர, குழுவில் ஸ்காட் போட்டீட், ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் கர்னல்; மற்றும் இரண்டு ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள், ஒரு முன்னணி விண்வெளி செயல்பாட்டு பொறியாளர் அன்னா மேனன் மற்றும் விண்வெளி வீரர்கள் பயிற்சியை மேற்பார்வையிடும் பொறியாளர் சாரா கில்லிஸ் ஆகியோர் உள்ளனர். 

நடைபயண நோக்கம் என்ன?

ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் கேப்சூலில் பயணம் செய்யும் குழுவினர், முதலில் பூமியிலிருந்து அதிகபட்சமாக சுமார் 1,400 கி.மீ செல்வர். இது 1966 இல் நாசாவின் ஜெமினி XI மிஷன் அடைந்த 1,372 கிமீ உயரத்தில் இருந்து அதிகமாக இருக்கும். இது நிலவு பயணம் திட்டம் இல்லாத வேறு குழு பணி திட்டத்தில் இதுவரை யாரும் செல்லாத  சாதனையாகும்.


விண்கலத்தில் இருந்து காப்ஸ்யூல் வெளிவந்து விண்வெளி நடைப்பயண பணிக்காக குறைந்த சுற்றுப்பாதையில் இறங்கும். பயணத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை நடைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு குழு உறுப்பினர்கள் - ஐசக்மேன் மற்றும் கில்லிஸ் - மட்டுமே விண்வெளி நடைபயணம் செல்வர். இவர்கள் 2 பேர் மட்டுமே காப்ஸ்யூலை விட்டு வெளியே செல்வர். Poteet மற்றும் மேனன் பாதுகாப்பு டெதர்களை நிர்வகிப்பதற்கு உள்ளேயே இருப்பார்கள் மற்றும் எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்து கவனிப்பார்கள்.


source https://tamil.indianexpress.com/explained/all-about-the-polaris-dawn-mission-first-private-spacewalk-7061749