வெள்ளி, 6 செப்டம்பர், 2024

னவர்கள் கைது மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

 5 9 24

Arrest of fishermen Chief Minister #MKStalin's letter to Union Minister!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மற்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை தள்ளுபடி செய்யவும் நடைவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

“தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண்.IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்கிறது. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 21-07-2024 அன்று IND- TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்களை தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/arrest-of-fishermen-chief-minister-mkstalins-letter-to-union-minister.html

Related Posts:

  • Jobs   Date: Saturday, April 11, 2015 Category: Jobs Offered Region: Riyadh Posting ID: 26913245 Required UrgentlyAccountant… Read More
  • கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி? கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள்.உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை,… Read More
  • நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ் Posted on APRIL 11, 2015 6:28 PM by TAMILCINEMA பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரை… Read More
  • Fish !!!!!!!!! Read More
  • சிம் கார்டு. உலகை நொடியில் இணைக்கும் சிம் கார்டு.. கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க.. உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்ப… Read More