சனி, 8 நவம்பர், 2025

இனி வருஷத்துக்கு 2 முறை மட்டும் தான்; ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு: திருத்தம் செய்ய புது கட்டுப்பாடு

 


 

தமிழ்நாட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டம் என்றால் அதற்கு முக்கியம் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டுகளில் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்துகொள்ளலாம் என்ற வசதி இருந்த நிலையில், தற்போது இந்த வசதி மாற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பொது விநியோக திட்டம் மற்றும் நலத்திட்டங்களைப் பெற ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில், 2.26 கோடி ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கார்டுகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்பட்டு வரும நிலையில், அரசின் நலத்திடட உதவிகளை பெறுவதற்கு முக்கியமாக பெற வேண்டியது ரேஷன் கார்டு தான். இந்த ரேஷன் கார்டுகள் மூலமாக தான் அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 

அதேபோல் இந்த ரேஷன் கார்டுகளில். பெயர் சேர்க்கை, நீக்கம், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் என திருத்தங்களை நாம் வீட்டில் இருந்தே செய்யும் வசதியும், எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்துகொள்வதற்கான வசதியும் அளிக்கப்பட்டு வந்தது. எததனை முறை விண்ணப்பித்தாலும், அதை அதிகாரிகள் பரிசீலித்து ஒப்புதல் அளிப்பார்கள். இதன் மூலம் மக்கள் தங்கள் நினைதத நேரத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்துகொள்ள முடிந்தது. ஆனால் தற்போது இந்த வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உணவுத் துறை, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் மாறறம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில். ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'ரேஷன் இதனால் இனி ரேஷன் கார்டுகளில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தம் செய்ய விண்ணப்பிக்க முடியும்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை இயக்குனர் சிவராசு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய மாற்றங்களை மேற்கொள்ள, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி, ஆவணம் பதிவிறக்க அனுமதி அளிக்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-announced-yearly-2-times-for-correction-allowed-in-ration-card-10637207